அடிக்கடி வயிற்று வலி, சிறுநீர் கழிக்க சிரமம் உண்டாவதேன்?
இன்றைய அவசர உலகில் பலர் தண்ணீர் குடிப்பதை கூட மறந்து விடுகின்றனர்.
இதனால் சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்பட்டு வயிறு வலி ஏற்படும்.
வெப்பமான இடத்தில் பணிபுரிபவர்களுக்கும், தண்ணீர் அதிகம் குடிக்காதவர்களுக்கும் தான் பெரும்பாலும் பிரச்னை வருகிறது.
எனவே, நார்ச்சத்து அதிகமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கல் பெரிதாக இருந்தால் கிருமி தொற்று ஏற்படவும், நீண்ட நாள் கவனிக்காமல் இருந்தால் சீறுநீரகம் செயலிழக்கவும் வாய்ப்புள்ளது.
8 மி.மீ., அளவு வரை கல் இருந்தால் மருந்து மூலம் குணப்படுத்த முடியும். அதுவே 10 மி.மீ., அளவை தாண்டினால் அறுவை சிகிச்சை செய்ய நேரிடும்.
தற்போது லேசர் மூலம் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.