ரத்த அழுத்தத்துக்கான மாத்திரையை தொடர்ந்து எடுத்தால் சிறுநீரக பாதிப்பு வருமா?

மாத்திரை அளவை தன்னிச்சையாக முடிவு செய்து குறைக்கக்கூடாது. டாக்டர் பரிந்துரைத்த அளவு எடுப்பதே நல்லது.

மருந்தின் அளவைக் குறைத்தால் ரத்த அழுத்தம் கூடிவிடும்.

தற்போதுள்ள மாத்திரைகளை பலர் 30 ஆண்டுகளுக்கு மேலாக சாப்பிட்டும், நன்றாக உள்ளனர்.

இந்த மாத்திரைகளால் சிறுநீரக பாதிப்பு வரும் என்பது பொய்.

டாக்டர்கள் பரிந்துரைக்காத மாத்திரைகளை எடுப்பதாலோ, கொடுத்த காலத்தைத் தாண்டி கூடுதலாக தொடர்ந்து எடுத்தாலோ, சீறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

இதுதவிர, அவ்வப்போது கடைகளுக்குச் சென்று, வலி மாத்திரைகள் வாங்கி போடுவதாலும் தான் சிறுநீரகம் பாதிப்படையக்கூடும்.