சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அடிவயிற்றில் வலி ஏற்பட காரணம் என்ன?
சிறுநீரில் கிருமித் தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு போன்ற காரணங்களால் கல் ஏற்பட்டு அடிவயிற்றில் வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படலாம்.
இதற்கு சிறுநீர் பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்து, ஸ்கேன் பார்க்க வேண்டும்.
சிறுநீரில் கல் இருந்தால் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம்.
சிறுநீர் பாதையில் புற்று நோயாக இருந்தால் நோயின் தன்மைக்கு ஏற்ப எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் கீமோ தெரபி மூலம் குணப்படுத்தலாம்.
சிறுநீரக கல்லை அகற்றாவிடில் பின்னாளில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
பொதுவாக சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
உணவில் உப்பின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.