மொபைல் எண்ணுக்கு இருப்பது போல வங்கி கணக்குக்கும் போர்ட்டபிலிட்டி வசதி கிடைக்குமா?

அலைபேசி நிறுவனங்களுக்குள் 'மொபைல் போர்ட்டபிலிட்டி' இருப்பது போல் வங்கிகளுக்கும் 'பேங்கிங் போர்ட்டபிலிடி' கொண்டு வந்தால் என்ன?...

அனைத்து வங்கிகளும் ஆர்.பி.ஐ.,யின் ஆளுமையின் கீழ்தானே இயங்குகிறது எனபது பலரின் எண்ணமாகும்.

ரிசர்வ் வங்கியும் கடந்த 2017லேயே, இந்த வங்கி கணக்கு எண் போர்ட்டபிலிடி பற்றி யோசித்துள்ளது.

ஆனால், இதிலுள்ள நடைமுறை சிக்கல் என்னவென்றால், மொபைல் எண்கள் அனைத்தும் 10 இலக்கங்கள் மட்டுமே. ஆனால், வங்கி கணக்கு எண்கள் 9 - 18 இலக்கங்கள் வரை உள்ளன.

மேலும், அவை வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., குறியீட்டுடன் பிணைந்தவை. இதை மாற்றுவது, உலகளாவிய பணப்பரிவர்த்தனை அமைப்பையே மாற்றுவதாகும்.

இந்த சிக்கலை தவிர்க்கவே, 'யு.பி.ஐ.,' முறையை ஆர்.பி.ஐ., கொண்டு வந்தது.

இன்று உங்களின் மொபைல் எண்ணே, நிரந்தர வங்கி அடையாளமாக மாறிவிட்டது.

நீங்கள் எந்த வங்கிக்கு மாறினாலும், அதே மொபைல் எண் / யு.பி.ஐ., - ஐ.டி., வாயிலாக, உங்கள் பணப்பரிவர்த்தனையை எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்கிறீர்கள்.

டிஜிட்டல் முறையில் இதுவும் ஒரு வகை 'போர்ட்டபிலிடி' தான்!