குளிர் கால பிரச்னைகளும், தீர்வுகளும்!

நீரிழிவு நோய் உள்ளவர்கள் பாதங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிலேயே முடங்கிக் கிடக்காமல் சற்று நேரம் காலையிலும், மாலையிலும்நடைப்பயிற்சி செய்யலாம்.

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் குளிர்காலத்தில் மெதுவாக நடப்பதே சிறந்தது.வெளியில் செல்லும் போது மாரடைப்பு வலிக்கு தேவையான மாத்திரைகளை எடுத்து செல்லவேண்டும்.

தைராய்டு குறைவாக உள்ள நோயாளிகளால் அதிக குளிரை தாங்கிக் கொள்ள முடியாது.தாகம் சற்று குறையும். நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம்.

தொடர்ந்து அசுத்த நீரில் கால்களை வைத்திருந்தால் எலி ஜுரம் வர வாய்ப்பு அதிகரிக்கும். கொசுக்கடியால் மலேரியாமற்றும் டெங்கு வர வாய்ப்புகளும் அதிகம். அதனால் பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

ஆஸ்துமா, அடிக்கடி இருமல், சளி தொல்லை உள்ளவர்கள், ப்ளூ காய்ச்சல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்வத நல்லது. இதை வருடத்திற்கு ஓரு முறை போடவேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குளிர்காலத்தில் தசை மற்றும் மூட்டுகள் இறுகி விடும். அதனால் வலியும் ஏற்படும். சிறிது நேர நடைப்பயிற்சி தினமும் செய்வது மிகவும் அவசியம்.