பனிக் காலமும் சரும பராமரிப்பும்...
இது குளிர்காலத்தின் தொடக்கம். இந்த சமயத்தில் கொஞ்சம் சரும பராமரிப்பில் கவனம் செய்தால் போதும், தோல் வறட்சியிலிருந்து தப்பிக்கலாம்.
குளிர் வானிலையில் வாய் ஓரம், கன்னத்தில் என்று முகத்தில் ஆங்காங்கே வெள்ளை திட்டுகள் உண்டாகும்.
தினமும் குளிக்கச் செல்லும்முன் தேங்காய் எண்ணெய் சிறிது உடலில் தேய்த்து மசாஜ் செய்தால், சருமம் வறண்டு போகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிக சூடான தண்ணீரில், நீண்ட நேரம் குளித்தால் சருமத்தில் அதிக வறட்சி உருவாகும். எனவே வெதுவெதுப்பான சூட்டில் தான் குளிக்க வேண்டும்.
தினமும் உணவை மிதமான சூட்டில் எடுத்துகொள்ள வேண்டும். தண்ணீரும் கூட வெது வெதுப்பான சூட்டில் குடிக்கவும்.
இந்த சீசனில் கிடைக்கும் ஆரஞ்சு, ஆப்பிள் பழங்களை தினம் தினம் உண்ண வேண்டும். இப்படி செய்வதால் சருமத்தில் நீரெற்றம் ஏற்பட்டு மிளரும்.
வாரம் இரு நாட்கள் எதாவது ஒரு பேஸ் பேக் போடலாம். கற்றாழை ஜெல்லுடன் சிறிதளவு தயிர் சேர்த்து வறட்சி சருமத்தில் தடவி கொள்ளுங்கள்.
வீட்டில் சரும பராமரிப்பிற்காக வெண்ணெய் வைத்துக்கொள்வது நல்லது. உதடு வெடிப்பு, சரும வெடிப்பு உள்ள இடங்களில் அவற்றை தடவலாம்.