நம்மிடமே இருக்கு மருந்து - பீட்ரூட்!

பீட்ரூட் சாறு எடுத்து, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, அல்சர் நோய் குணமாகும்.

பீட்ரூட்டில் வைட்டமின், 'கே' சத்து மிகுந்த அளவில் உள்ளது. பீட்ரூட்டை தொடர்ந்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, இளநரை மறையும்.

பீட்ரூட் கூட்டு, மலச்சிக்கலை நீக்கி, ரத்த சோகையை குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச் சாறு கலந்து சாப்பிட்டு வர, சிறுநீரகங்களும், பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

உதட்டில் வரக்கூடிய வெடிப்பை தவிர்க்க, பீட்ரூட் சாறு மருந்து போல் செயல்படும்.

உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், கிட்னியில் கற்கள் உருவாவதை தடுக்கலாம்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறை தடவினால், கொப்புளம் ஆகாமல் விரைவில் புண் ஆறும்.

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து, நம் உடலில் புதிதாக ரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது.