தானம் பெற்ற இதயத்துடன் 25 ஆண்டுகளாக வாழும் பெண்; அரிதான நிகழ்வு குறித்து சுவாரஸ்ய தகவல்

தானம் பெற்ற இதயத்துடன் இருபத்து ஐந்து ஆண்டு வாழ்க்கையை நிறைவு பெற்ற ம . பி . , மாநில பெண் , இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு நீண்ட காலம் வாழ்பவர் என்ற சாதனையை படைத்துள்ளார்

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரீத்தி உன்ஹேல் , வயது51 . இவருக்கு கடந்த இரண்டாயிரமாம் ஆண்டில் இதய பாதிப்பு காரணமாக கடுமையாக அவதிப்பட்டு வந்து இருக்கிறார் .

அவருக்கு நீடித்த கார்டியோமயோபதி ( dilated cardiomyopathy ) எனப்படும் பலவீனமான இதயத் தசை பாதிப்பு இருப்பது தெரியவந்தது .

இதய தசை பலவீனமடைந்து பெரிதாகி , ரத்தத்தை திறம்பட பம்ப் செய்யும் திறன் குறைந்து செயலிழப்பு ஏற்பட்டது .

இரண்டாயிரமாம் ஆண்டில் , பீர்த்தி உன்ஹேலுக்கு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டர் பி.வேணுகோபால் மூலம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது முதல் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வருகிறார் . மருத்துவர் பரிந்துரைத்தபடி , சரியான உணவு , மாத்திரைகளை உண்டு வருகிறார்

தற்போது, ஐம்பத்து ஒன்று வயதான பீர்த்தி உன்ஹேல் தானம் பெற்ற இதயத்துடன் இருபத்து ஐந்து ஆண்டுகள் வாழ்வை நிறைவு செய்துள்ளார் .

இதய மாற்று சிகிச்சை பெற்ற பிறகு நீண்ட காலம் வாழ்பவர் என்ற பெருமையை பெற்றார் . இது இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகும்