உலகின் நீளமானது... இந்திய அரசியலமைப்பு சட்டம் !

இந்தியாவின் 75வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. குடியரசு என்பதன் பொருள் மக்களாட்சி.

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஆங்கிலம், ஹிந்தியில் எழுதப்பட்டது. வார்த்தைகள் அடிப்படையில் (1.46 லட்சம்) உலகின் நீளமானது. அமெரிக்க சட்டத்தை விட 30 மடங்கு அதிகம்.

அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த போது, ஒரு முன்னுரை, 22 பகுதிகள், 395 விதிகள், 8 அட்டவணைகள் இருந்தன. தற்போது ஒரு முன்னுரை, 25 பகுதிகள், 470 விதிகள், 12 அட்டவணைகள் உள்ளன.

கனடா, ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ், தென் ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஜப்பான், அயர்லாந்து, பிரிட்டன், ஆஸ்திரேலியா என 10 நாடுகளிடம் இருந்த சில அம்சங்கள், இந்திய அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்டன.

அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த போது, சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, கல்வி - பண்பாட்டு உரிமை சொத்துரிமை உட்பட ஏழு அடிப்படை உரிமைகள் இருந்தன.

இதில் 1978ல் 44வது சட்டத்திருத்தம் மூலம் சொத்துரிமை நீக்கப்பட்டது.

இதுவரை 114 சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வயது 62ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டது கடைசி சட்டத்திருத்தம்.