உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இதில், பிரான்ஸ் முதலிடத்தில் உள்ளது.

மேலும் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் முதல் இடத்தில் உள்ளன. இதனை பயன்படுத்தி 194 நாடுகளுக்கு விசா இன்றி செல்ல முடியும்.

இந்த ஆண்டு பட்டியலில் ஐரோப்பிய நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. பின்லாந்து, நெதர்லநாந்து, சுவீடன் மற்றும் தென் கொரியா நாடுகள் 2வது இடத்தில் உள்ளன.

இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் லக்ஸம்பர்க் நாடுகள் 3வது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்த பட்டியலில் இந்தியா 85வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.

69வது இடத்தில் இந்தோனேஷியா, தாய்லாந்து 66-வது இடம், சீனா (64), சவுதி அரேபியா (63), மாலத்தீவு ( 58) ,தென்னாப்பிரிக்கா (55)-வது இடத்திலும், என நாடுகள் பகிர்ந்து கொண்டுள்ளன.

பாகிஸ்தான் இந்த பட்டியலில் 101வது இடத்தில் உள்ளது.