இன்று தேசிய குடிமை பணிகள் தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 21-ம் தேதி இந்தியாவில் தேசிய குடிமை பணிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

இந்தியாவின் வளர்ச்சியில் ஐ.ஏ.எஸ்., / ஐ.பி.எஸ்., / ஐ.ஆர்.எஸ்.,/ ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் (குடிமை பணி) அதிகாரிகளின் பங்கு முக்கியமானது.

1947 ஏப்., 21ல் டில்லி 'மெட்கால்பே' இல்லத்தில், இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முதல் குழுவிடம் உரையாற்றினார்.

இதை நினைவுபடுத்தும் விதமாக 2006ல் ஏப். 21ல் தேசிய குடிமை பணிகள் தினம் தொடங்கப்பட்டது.

தேசத்துக்கு குடிமைப்பணி அதிகாரிகள் ஆற்றும் பணி பாராட்டுக்குரியது. நல்ல நிர்வாகத்துக்கான கட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறார்கள்.

நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.