உலகின் மிக அமைதியான அறை இங்க தான் இருக்கு..!
அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறை, "உலகின் மிக அமைதியான அறை" என கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது ஒரு தியான அறை போல தோன்றினாலும், ஒரு சிலரால் மட்டுமே இந்த இடத்தில் நீண்ட காலம் செலவிட முடியும்.
அனிகோயிக் சேம்பர் என்று அழைக்கப்படும் இந்த அறையை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆனதாம்.
மேலும் இது வெளிப்புற சத்தம் நுழையாத வகையில், முற்றிலும் ஒலிப்புகாத பொருட்கள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
அல்ட்ரா- சென்சிட்டிவ் சோதனை முடிவுகளில், அறையின் சராசரி பின்னணி இரைச்சல் -20.35 டெசிபல்கள் என வந்துள்ளது.
நம் காதுகளில் இருந்து பொதுவாக ஒலியை வெளியிடும். காது சவ்வு பகுதிகளில் காற்று அழுத்தம் இருப்பதால் இது போன்று இருக்கும்.
வெங்காயம் போன்ற உள்கட்டமைப்புடன் விளங்கும் அறை, முழுமையான அமைதியை உருவாக்குவதற்காக கட்டிடத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் வெளி உலகத்திலிருந்தும் வேறுபடுத்தி காட்ட உதவுகிறது.
மைக்ரோபோன்கள், போன்ற ஆடியோ உபகரணங்களும், தொடுதிரையில் இடம்பெற்ற கீபோர்டுகள், மவுஸ் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் போது வெளிவரும் ஒலியின் அளவை பகுப்பாய்வு செய்ய மைக்ரோசாப்ட் இந்த அறையை பயன்படுத்துகிறது.
வீடியோ காலிங் செயலியான ஸ்கைப் , கோர்டானா விர்ச்சுவல் அசிஸ்டெண்ட் போன்ற சில மென்பொருள்களும் இந்த அறை மூலன் பயனடைந்துள்ளன.