வாசனை செடிகள் பாம்புகளை ஈர்க்குமா… என்ன செய்யலாம்?
வீட்டை சுற்றி தோட்டம் அமைத்தாலேயே பூச்சிகள் மற்றும் புழுக்களின் வாழ்விடமாக மாறும். அதிலும் சில தாவரங்கள் பாம்புகளை ஈர்க்கின்றன.
பாம்புகள் வாழ்வதற்கு குளிர்ந்த, இருண்ட இடங்களைத் தேர்ந்தெடுக்கின்றன. எனவே சந்தன மரம், போன்ற குளிர்ச்சி அதிகம் காணப்படும் மரங்கள் வைத்தால் பாம்பு வரக்கூடும்.
தேவைக்காக எலுமிச்சை மரம், சீதா பழம் உள்ளட்ட மரங்கள் வைக்கப்படுகிறது. இந்த பழங்களை சாப்பிட வரும் பூச்சிகள் மற்றும் பறவைகளை வேட்டையாடவே பாம்புகள் வரும்.
மல்லிகை செடி, ஜாலி, முல்லை கொடி போன்ற நறுமணத்துடன் கூடிய பூச்செடிகள் வீட்டை அழக்காக்கும். இது அடர்த்தியாக காணப்படுவதால் நல்ல நிழல் தரும். இந்த குளிர்ந்த சூழலிற்காகவே பாம்பு வரக்கூடும்.
சிறியாநங்கை (நில்வேம்பு), பெரியாநங்கை, துளசி செடிகள் இருக்கும் இடங்களில் பாம்புகள் வராது. இதை வீட்டை சுற்றி சேர்த்து வளர்க்கலாம்.
பாம்பு வரும் என்பதற்காக மரங்களை வெட்ட வேண்டும் என்பது அவசியமில்லை. மரம் செடி வளர்க்க விரும்புவோர் திட்டமிட்டு வீட்டையும் சற்று உயர்த்தி கட்டலாம்.
பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வராமல் இருக்க செடிகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். மேலும் பாம்பு வரும் செடிகள் அருகே செல்லும் போது கவனமாக இருப்பதும் மிகவும் அவசியம்.