தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்... இன்று உலக தந்தையர் தினம்
குழந்தைகளின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பவர் தந்தை. அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம் என பாடல் வரியே உண்டு.
தந்தையருக்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் 1909ல் சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற பெண், அன்னையர் தினம் கொண்டாடுவது போல, தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இவரது தாயாரின் மறைவுக்குப் பின், தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை சிரமங்களுக்கிடையே வழி நடத்தி வந்தார்.
இதுதான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு ஏற்படுத்தியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத்தருவதே இத்தினத்தின் நோக்கம்.