இயற்கையோடு இணைந்த நாடு... எந்த இடத்தில் இந்தியா ?
இயற்கையை விரும்பாதவர் யாருமில்லை எனலாம்.
உலகில் மக்கள் எங்கு அதிகமாக இயற்கையோடு இணைந்து வாழ்கின்றனர் என பிரிட்டனின் டெர்பி பல்கலை ஆய்வு நடத்தியது.
61 நாடுகளில் 57 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் இப்பட்டியலில் முதலிடத்தில் நேபாளம் உள்ளது.
அடுத்த நான்கு இடங்களில் ஈரான், தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், நைஜீரியா உள்ளன.
ஆனால் இதில் ஆய்வை நடத்திய பிரிட்டன் (55வது இடம்), கடைசியில் இருந்து ஏழாவதாக உள்ளது.
கடைசி இடத்தில் ஸ்பெயின் (61) உள்ளது.
இப்பட்டியலில் இந்தியா 28வது இடத்தில் உள்ளது.