அபூர்வ பலன்களை அள்ளித் தரும் ஆலுவேரா !

'ஆலுவேரா' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சோற்றுக் கற்றாழையில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. அழகு சிகிச்சை மட்டுமின்றி பலவித அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கற்றாழையை ஒருசிலர் அப்படியே சாப்பிடுவர். இதில், கால்சியம், குளோரின், சோடியம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 உட்பட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளன.

கற்றாழையிலிருந்து எடுக்கப்படும் 'ஜெல்' சருமத்தின் ஈரத்தன்மையைப் பாதுகாக்கிறது. தோல் தொடர்பான பிரச்னைகளுக்கு கற்றாழையைப் பயன்படுத்தலாம்.

பொலிவான சருமத்தைப் பெறவும், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கும் கற்றாழை சாற்றைப் பயன்படுத்தலாம். தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவாக குணமடைய உதவுகிறது.

சூரிய ஒளியின் அல்ட்ராவயலெட் கதிர்வீச்சுகளின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க இது உதவுகிறது. சன்ஸ்க்ரீன் பயன்படுத்தாதவர்கள் கற்றாழை ஜெல்லை சருமத்தில் தடவலாம்.

கண்களுக்குக் கீழேயுள்ள கருமையை நீக்கவும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசருடன் ஜெல்லை கலந்து, சருமத்தில் தடவி வர, சருமத்துக்கு பொலிவு கிடைக்கும்.