காஸ் அடுப்புக்கு மாற்று சில...

வீடுகளுக்கு வினியோகிக்கப்படும், காஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு வரலாம் என, தகவல் பரவி வருகிறது.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாற்று அடுப்பு வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

இண்டக்ஷன் அடுப்புகள் என்பது மின்சாரம் மூலம் இயங்கும். இவை வேகமாக சமைக்கக்கூடிய ஆற்றல் திறன் கொண்டவை.

எலக்ட்ரிக் குக்கர் அரிசி மட்டுமல்ல பருப்பு, காய்கறிகள் போன்றவற்றை சமைக்கவும் மிகவும் ஏற்றது.

மின்சார அடுப்புகள் என்பது சூடான சுருள் அல்லது கண்ணாடி மேற்பரப்பு கொண்டவை. இவை பயன்படுத்த மட்டுமல்ல சுத்தம் செய்வதும் மிகவும் எளிது.

தற்போது பிரபலமாக உள்ள ஏர் பிரையர்கள் எண்ணெய் இல்லாமல் சமைக்க, வறுக்க ஏற்றது.

மைக்ரோவேவ் ஓவன் நாம் சமைக்கமட்டுமல்ல சூடாக்கவும், வேகவைக்கவும் பயன்படுத்தலாம்.

சூரியசக்தி அடுப்புகள் உபயோகிப்பதால் எரிபொருள் செலவு இல்லவே இலை. இவை சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது.