சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்று வழிகள்!
மென்ஸ்ட்ருவல் கப்கள், ஃபேனல் அல்லது கூம்பு வடிவில் சிலிக்கானால் செய்யப்பட்டவை. அளவில் சிறியதாக உள்ள இந்த கப்பை, மாதவிடாய் நாட்களில் நாப்கினுக்கு பதிலாக உள்ளே பொருத்திக் கொள்ளலாம். இது 12 மணிநேரம் வரை தாங்கும்.
மென்ஸ்ட்ருவல் கப் போலவே மென்ஸ்ட்ருவல் டிஸ்க்கையும் உள்ளே பொருத்திக் கொள்ளலாம். ஆனால், இதன் அளவும், இன்சர்ட் செய்யும் அமைப்பும் மாறுபடும். இது 12 மணி நேரம் வரை தாக்குபிடிக்கக் கூடியவை.
நாப்கின்களை போலவே உறிஞ்சும் பொருள் டாம்பான். ஆனால், இவை நாப்கினை போல் பட்டையாக இல்லாமல், உருளை வடிவத்தில் இருக்கும். ஆகவே இதை உள்ளே பொருத்தி பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள ஸ்ட்ரிங் போன்ற நூலை இழுத்து நீக்கலாம்.
க்ளாத் நாப்கின் துணியால் செய்யப்பட்டிருக்கும். மென்ஸ்ட்ருவல் கப், டிஸ்க், டாம்பான்கள் போன்ற மாற்று சாதனங்களை பயன்படுத்துவது சிரமமாக இருந்தால், க்ளாத் நாப்கின்கள் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும்.
பீரியட் பான்டீசை, உள்ளாடை போல் அணிந்து கொள்ளலாம். பல அடுக்குகள் கொண்டு செய்யப்பட்டதால் லீக்கேஜ் பற்றிய கவலை வேண்டாம். சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்.