இன்று உலக கல்லீரல் தினம்

உலக கல்லீரல் தினம் ஆண்டுதோறும் ஏப்.,19ல் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

உலகில் 150 கோடி பேர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உடல் உறுப்புகளில் கல்லீரல் முக்கியமானது.

தேவையற்ற நச்சுக்களை நீக்குதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருத்தல், வைட்டமின், ஊட்டச்சத்துகளை சேமித்து வைத்தல் உட்பட பல பணிகளை மேற்கொள்கிறது.

இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக அளவில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'நல்ல பழக்கங்கள்; வலுவான கல்லீரல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

துரித உணவு, உடற்பயிற்சியின்மை, மது, புகைப்பிடித்தல் உள்ளிட்டவை காரணமாக கல்லீரல் பாதிக்கிறது.

சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, அதிகப்படியான சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், மது அருந்துவதைத் தவிர்ப்பது அவசியமாகும்.