குழந்தைகளுக்கு அஜீரண பிரச்னையா? தீர்வுகள் சில...

குழந்தைகளுக்கு உணவை சரியான முறையில் வழங்கினால் அஜீரணக் கோளாறு ஏற்படாது. 3 வயதுக்கு மேல் குழந்தைகள் தானாக எடுத்து சாப்பிடத் துவங்கி விடுவர்.

அப்போது நார்சத்து உணவு எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்கின்றனர்.

பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றை அதிகம் உண்பதால் செரிமானத் தன்மை குறைந்து விடும்.

குறிப்பிட்ட வயதில் வயிற்றுப் பூச்சி நீக்கும் மாத்திரை வழங்க வேண்டும். அந்த மாத்திரை கொடுக்காமல் விடுவதாலும் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அஜீரணக் கோளாறால் வயிற்று வலி ஏற்பட்டால் ஓமம் கலந்த தண்ணீர் கொடுக்கலாம்.

ஏலக்காய் சூரணம் எடுத்துக்கொண்டால் வாயு வெளியேறி பசி எடுக்க துவங்கும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாக்கெட்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பூசணிக்காய் மற்றும் பழங்களை அதிகம் கொடுக்க வேண்டும்.