50 பிளஸிலும் உற்சாக தோற்றம் பெற...

இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை முழுமையாக அகற்ற வேண்டும். இல்லாவிடில், துளைகள் அடைக்கப்பட்டு, எளிதாக சுவாசிக்க முடியாமல், நாளடைவில் சருமம் பொலிவு குறையக்கூடும்.

ஈரப்பதத்தை தக்க வைக்கும் சோப்புகள் மற்றும் பாடிலோஷன்களை பயன்படுத்தலாம். குறிப்பிட்ட இடைவெளியில் முழு உடல் பரிசோதனை செய்யும் போது, சருமத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சூரிய ஒளி அதிகமாக உள்ள நேரத்தில் வெளியே செல்வதை முடிந்தளவுக்கு தவிர்க்கவும். முகம் மட்டுமின்றி கழுத்து, காதுமடல்கள் மற்றும் கைகளுக்கும் தரமான சன்ஸ்கிரீன் கிரீம்களை பயன்படுத்தலாம்.

ஹேர் கலரிங் செய்வதால் நரைமுடியை மறைக்கலாம். உங்களுக்கு பிடித்தாற்போன்று ஹேர் ஸ்டைலையும் மாற்றும் போது, இளமைத் தோற்றத்துடன் மனதையும் புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.

பழங்கள், காய்கறிகளை அதிகளவில் எடுக்கும்போது இதய ஆரோக்கியம், உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்; செரிமான பிரச்னையும் தவிர்க்கப்படுகிறது.

அதிகளவில் தண்ணீர் குடிப்பது சருமத்தை உள்ளே இருந்து ஈரப்பதமாக்க உதவுகிறது. உங்களின் சருமத்தை புத்துணர்ச்சி அடையச் செய்வதன் மூலம் இயற்கை அழகை மேம்படுத்தலாம்.