இந்தியாவில் தங்கம் இறக்குமதி வரி உயர்வால் என்ன பயன்?
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது, வெறும் வரி வசூல் நடவடிக்கை மட்டுமல்ல.
நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் ஒரு மிகப்பெரிய பொருளாதார நகர்வு என கூறப்படுகிறது.
தற்போது விதிக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 15 சதவீத வரியில், 10 சதவீதம் அடிப்படை சுங்க வரியும், 5 சதவீதம் வேளாண் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வரியும் அடங்கும்.
எனவே, தேவையற்ற தங்கம் இறக்குமதியை குறைத்து, அதில்
மிச்சமாகும் அன்னிய செலாவணியை கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசிய
இறக்குமதிக்கு பயன்படுத்த முடியும்.
இறக்குமதி செலவை குறைப்பதன் வாயிலாக, நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை குறைக்க முடியும்.
அன்னிய செலாவணி வெளியேற்றம் குறையும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைவதை தடுக்கலாம்.
ஏன் இந்த கட்டுப்பாடு?... இந்தியா, தனது தங்கத்துக்கான தேவையில் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை இறக்குமதி வாயிலாகவே பெறுகிறது.
இந்தியா தங்கம் இறக்குமதிக்காக கடந்தாண்டில் மட்டும்
கிட்டத்தட்ட ரூ. 6.88 லட்சம் கோடியை செலவிட்டுள்ளது. இது, நாட்டின்
ஒட்டுமொத்த இறக்குமதி செலவில் சுமார் 10 சதவீதமாகும்.
இதை குறைக்கும் நோக்கில் தான், ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டுமென மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.