ஹூண்டாய் ஃபேஸ்லிஃப்ட் ஐ20 என் லைன் இந்தியாவில் அறிமுகம்!

ஹூண்டாய் தனது புகழ் பெற்ற ஐ20 என் லைன் (Hyundai i20 N Line) காரில் இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

காஸ்மெடிக் மாற்றங்களை பொறுத்தவரை வழக்கமான என் லைன் ஐ20 போலவே ஸ்போர்டி லுக்கில் தெரிகிறது.

புதிய கிரில், முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள் - எல்இடி புரொஜெக்டர்கள் ஹெட் லேம்ப், உள்ளிட்ட சிறிய மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன.

இத்துடன் புதிதாக அபிஸ் பிளாக் (Abyss Black), அட்லஸ் ஒயிட் (Atlas White), ஸ்டேரி நைட் (Starry Night) மற்றும் 6 ஒற்றை நிறங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய என் லைன் வெர்ஷனானது, என்6 மற்றும் என்8 என இரு ட்ரிம்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உட்பட 4 விதமான தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல், வழக்காமான 1.0 லிட்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜினே இதிலும் வழங்கப்பட்டுள்ளது