மார்பக கேன்சரா? மகளிருக்கு தன்னம்பிக்கை தரும் மறுசீரமைப்பு!
மார்பக கேன்சர் பாதிப்பால், மார்பகங்களை அறுவை சிகிச்சை செய்து அகற்றிய பின், மார்பக மறுசீரமைப்பு- செய்ய அறிவுறுத்த வேண்டும் என்பது அமெரிக்கா, ஐரோப்பியாவில் உள்ள நடைமுறை.
மார்பக கேன்சர் பாதிப்பால் மார்பகத்தை இழக்க நேரிட்டால், அதற்கு மாற்றாக மறுசீரமைப்பு செய்யலாம். இதனால் கேன்சர் பாதிப்பிலும் ஒரு நிம்மதி கிடைக்கும்.
மார்பு பகுதியில் உள்ள கொழுப்பு திசுக்களால் உருவானது தான் மார்பகங்கள்.
சதையை ஒரு இடத்தில் இருந்து எடுத்து இன்னொரு இடத்தில் வைக்கும் போது, அது உயிர்ப்புடன் செயல் பட ரத்த ஓட்டம் இருக்க வேண்டியது அவசியம்.
சி.டி., ஸ்கேன் செய்து, எந்த இடத்தில் ரத்த நாளம், ரத்தக் குழாய் உள்ளதோ அங்கிருந்து கொழுப்பு சதையை எடுத்து மார்பக வடிவில் தயார் செய்யப்படும்.
பின் அகற்றிய மார்பகத்தில் உள்ள ரத்த நாளத்துடன் இணைத்து விடப்படும். பொருத்திய நிமிடத்தில் இருந்து அந்த திசு மார்பகதின் ஒரு பகுதியாக செய்லபட ஆரம்பிக்கும்.