சிறுநீரக கற்களை சித்த வைத்தியத்தில் கரைக்கலாமா?

சிறுநீரக கற்கள் உருவாவதற்கு உணவுப்பழக்கம், வாழ்க்கை முறைக்கு முக்கியப்பங்கு உள்ளது.

ஏழு மி.மீ.,க்கு குறைவான சிறுநீரக கற்கள் எளிதாக மருந்துகளின் உதவியுடன் கரைவதற்கு வாய்ப்புள்ளது.

நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான பீர்க்கங்காய், சுரக்காய், வெண்பூசணி, வாழைத்தண்டு, முள்ளங்கி அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

கால்சியம் சத்து அதிகமுள்ள அசைவ உணவுகளை தவிர்ப்பது, தேவையான அளவு நீர் அருந்துவது, இளநீர், மோர் அடிக்கடி அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

சிறுநீரை அடக்காமல் கழிக்க வேண்டும். வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

அரசு மருத்துவமனையில் 'நெருஞ்சில் குடிநீர்' என்ற சித்த மருந்து டாக்டர்களால் பரிந்துரை செய்யப்படுகிறது.

அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்தால் நிவாரணம் கிடைத்து, மீண்டும் கற்கள் உருவாகாமல் தடுக்க வாய்ப்புள்ளது.