மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வருமா ?

உலகளாவிய புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது இந்தியாவிலும் 23 சதவீத அளவு மார்பக புற்றுநோய் உள்ளது.

40 வயதிற்கு மேல் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். பெண் என்பது முக்கிய காரணம்.

முதுமை, குடும்ப ரீதியான பாதிப்பு, 10 வயதுக்கு குறைவான நிலையில் பூப்படைதல், 50 வயதுக்கு மேல் தாமதமாக மாதவிடாய் நிற்பது போன்ற காரணங்களால் இந்நோய் வரலாம்.

உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மது, புகைப்பழக்கம், 35 வயதுக்கு மேலான குழந்தைப்பேறு, பாலுாட்டாதிருத்தல் போன்றவையும் காரணங்கள் என்றாலும் இவற்றை எளிதாக தவிர்க்கலாம்.

துவக்கநிலையில் 'மேமோகிராம்' பரிசோதனையில் கண்டறிந்தால் மார்பகத்தை அகற்றாமல் குணப்படுத்த வாய்ப்புள்ளது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.

மார்பக புற்றுநோய் என்பது கட்டாயம் ஆண்களுக்கும் வரலாம். பெண்களுக்கு பொதுவானது.

ஆண்கள் மார்பகம் பெரிதாக இருந்தால் டாக்டரை கட்டாயம் சந்திக்க வேண்டும். மார்பக புற்றுநோய் வந்தால் மரபணு பரிசோதனை செய்து கொள்வது அவசியமானது.