கழுத்து வலி காரணமும் சிகிச்சை முறையும்!!

கழுத்தில் ஜவ்வு, சிறிய எலும்புகளின் தொகுப்புகள் உள்ளன. இவற்றில் தேய்மானம், வீக்கம் ஏற்பட்டும், சதை பிடிப்பு, ஜவ்வு பிரச்னை, வாதம் காரணமாகவும் கழுத்து வலி ஏற்படுகிறது.

கழுத்தை இயற்கையாக வைக்காமல் கீழ்நோக்கியோ, மேலே பார்த்தோ, பக்கவாட்டில் சாய்த்தோ நம் வசதிக்கேற்ப வைப்பது தான் பாதிப்பிற்கு முதல் காரணம்.

குறிப்பாக கணினி, அலைபேசியை அதிகம் பயன்படுத்துவது, மேலும் கோணலாகவே பார்ப்பது வலியை உண்டாக்கும்.

அதனால் படுத்துகிடந்தோ, முரணாக அமர்ந்தோ தொலைக்காட்சி பார்ப்பது, அலைபேசி உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்

துாக்கத்திற்கு ஒன்றுக்கு இரண்டு தலையணை பயன்படுத்துவதாலும் கழுத்து வலி வரும். தலையணை இன்றி துாங்கலாம் அல்லது உயரம் குறைந்த, மிருதுவானவற்றை பயன்படுத்தலாம்.

கழுத்திற்கு ஓய்வு கொடுப்பதும், உடற்பயிற்சி செய்வதுமே வலியில் இருந்து விடுபட உதவும்.

தீராத வலி இருந்தால் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் மூலம் வலிக்கான காரணத்தை அறிய வேண்டும்.

கழுத்தில் ஜவ்வு விலகுதல், தேய்மானத்தால் நரம்புகள் பாதித்தல், கூன் விழுந்து கழுத்தின் நேர் தன்மை பாதிக்கப்படுதல், கட்டி, தொற்று ஏற்படும் போது உடனடி சிகிச்சை மிகவும் அவசியம்.