காலையில் கண் விழித்ததும் ஒரு கப் காபி!
அரபு நாடுகளில் இருந்து, 1751ல் காபி நம் நாட்டிற்கு அறிமுகம் ஆனது. இத்தனை நுாற்றாண்டுகளாக பழக்கத்தில் இருக்கும் காபி, உடம்பிற்கு கெடுதல் என்பது தான் பொதுவான அபிப்ராயம்.
காபியில் உள்ள பிரதான மூலப்பொருள், 'கேபைன்!' இது டீ, சாக்லேட் பானங்களிலும் உள்ளது. இன்றைக்கு காபியில் 100க்கும் அதிகமான வகைகள் உள்ளன.
ஐந்து கிராம் காபி பொடியில், 50 மி.கி., அளவுக்கு கேபைன் சராசரியாக இருக்கும். தினமும் 200 - 250 மி.கிராம் வரை கேபைன் உடலுக்குள் செல்லலாம்.
தினமும் 400 மி.கிராமிற்கு மேல் கேபைன் நம் உடலுக்குள் சென்றால், உடல் நடுக்கம், சீரற்ற இதயத் துடிப்பு,தற்கொலை எண்ணம், கருச்சிதைவு, நெஞ்செரிச்சல் என்ற பலபிரச்னைகளை ஏற்படுத்தும்.
தினமும் 250 மி.கி., என்ற அளவில் கேபைன் உடலுக்குள் சென்றால், கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை ரத்தத்தில் அதிகரிக்கும்.
ரத்த நாளங்களின் உட்சுவரில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். சீரற்ற இதயத் துடிப்பைத் தடுக்கும். சிறிய ரத்த நாளங்களின்செயல்பாட்டை அதிகரிக்கும்.
இதயத் தசைகள் சுருங்கி விரியும் தன்மை வலுவாகும். அதிக ரத்தம் இதயத்திற்கு செல்லும். இதய செயலிழப்பைத் தடுக்கும்.
தொடர்ந்து காபி குடிப்பதால், நீண்ட நாட்கள் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் குறையும். மாரடைப்பு வருவதையும், இதய செயலிழப்பையும் மறைமுகமாக தடுக்கு
மற்ற உடல் உள்ளுறுப்பு செயல்பாடுகளில், கேபைன் செய்யும் நன்மைகளும் உண்டு. வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் நோய் அறிகுறிகளை தடுக்கும். தைராய்டு சுரப்பியை நன்கு வேலை செய்ய வைக்கும்.