பூனைகளுக்கு பஞ்சமில்லை... ஜப்பானில் இப்படியும் ஒரு வினோத தீவு!
விதவிதமான பூனைகளை பார்ப்பதற்காகவே, ஜப்பானிலுள்ள ஒரு தீவுக்கு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படையெடுத்து செல்கின்றனர்.
ஜப்பான் நாட்டிலுள்ள எகிமே பிரிபெக்சர் பகுதியிலுள்ள, ஓஷிமாயோ தீவு பூனைகளுக்காகவே மிகவும் பிரபலமானது. குறிப்பாக இதை பூனைகளின் தீவு என்பர்.
இங்கு பூனைகளுக்கு பஞ்சமே இல்லை.
ஏனெனில், இங்கு வாழ்பவர்கள், பூனைகளை செல்லப்பிராணியாக வளர்ப்பதில் மிகவும் ஆர்வமுள்ளவர்கள்.
இத்தீவின் மக்கள் தொகை, 900 மட்டுமே; ஆனால், இவர்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் பூனைகள் இங்கு வாழ்கின்றன.
இங்குள்ள மக்கள், மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டவர்கள் என்பதால், இங்கு ஒருபோதும் பூனைகளுக்கு உணவு பற்றாக்குறையும் ஏற்படுவதே இல்லை.
எனவே, விதவிதமான பூனைகள் ஓடியாடி விளையாடும் இந்த பூனை தீவை காண ஏராளமான சுற்றுலா பயணியர் வருவதால், இங்குள்ள மக்களுக்கு வருவாயும் அதிகம் கிடைக்கிறது.