கனவுத்தோட்டத்தில் கற்பூரவள்ளி செடி வளர்ப்பது மிகவும் எளிதே

மூலிகை வகையைச் சார்ந்தது தான், கற்பூரவள்ளி செடி.

இந்த செடியை வீட்டில் வளர்ப்பது, மிக மிக எளிதானது.

சின்ன தண்டை நறுக்கி மண்ணில் சொருகி வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றினால் வேர் விட்டுவிடும்.

பெரிய அளவில் வளர்க்க வேண்டுமென்றால், மண், வண்டல் மண், செம்மண், களிமண் கலவையை தயார் செய்து கொள்வது நல்லது.

இதன் நிறமும், வாசமும் உளவியல் ரீதியாக நம்மை உற்சாகப்படுத்தக்கூடும்.

செடி வைத்த 6 மாதங்களில் இலைகள் செழிப்பாய் வளர்ந்துவிடும். அப்போது தான் அந்த இலையில், 'மென்தால்' சதவீதம் அதிகரித்து, ஆரோக்கியத்திற்கு பயன்படும்.