கலைவாணி நின்கருணை தேன்மழையே.. இன்று... சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுதபூஜை !
மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை வழிபடுவது, இந்த நவராத்திரி பூஜையில் தான் என்பது சிறப்புடையது.
நவராத்திரி விழாவின் இறுதி நாளான மஹா நவமியான 9ம் நாள், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியின் ஆட்சிக் காலம்.
அக்காலத்தில் போர் செய்வது அதிகமாக இருந்ததால் வாள், வேல் ஆகியவற்றையும் பூஜிப்பர். இன்று தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள், வாகனங்களை அலங்கரித்து வழிபாடு நடக்கிறது.
கொலு வைக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட சரஸ்வதி பூஜையை கொண்டாடுவர். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
அனைத்து கலைகளுக்கும் அதிபதி என்பதால், நம்முடைய கலை சார்ந்த கலைப் பொருட்களையும் வைத்து பூஜை செய்யலாம்.
மல்லிகை, பிச்சி, துளசி, சாமந்தி, தாமரை மலர்களால் ஆன மாலையை அம்மனுக்கு சூட்டி வணங்குவது வழக்கம்.
பாசிபயறு, சுண்டல், கற்கண்டு சாதம், பொரி போன்ற நிவேதனங்களோடு உளுந்து வடை, பாயசம், பச்சடி, கறிவகைகள் என, விருந்து படைப்பர்.