முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே... இன்று பங்குனி உத்திரம் !

முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் 'காங்கேயன்' என பெயர் பெற்றார். சரவணப் பொய்கையில் அவதரித்ததால் 'சரவண பவன்' எனப்பட்டார்.

கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் 'கார்த்திகேயன்' என்றும், பராசக்தியால் ஆறு உருவமும் ஒரே வடிவமாக ஆக்கப்பட்டதால் 'கந்தன்' என்றும் பெயர் பெற்றார்.

முருகனுக்கு வலதுபுற கைகளில் கோழிக்கொடி, வச்சிராயுதம், அங்குசம், அம்பு, வேல் ஆகிய ஆயுதங்களும், இடப்புற கைகளில் தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் ஆகிய ஆயுதங்களும் இருக்கும்.

48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திர விரதமிருந்தால் பிறப்பு, இறப்பு சக்கரத்தில் இருந்து விடுபட்டு உயிர் மோட்சம் பெறும்.

கந்த புராணத்தில் உள்ள சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினமும் காலையில் படித்தால் பாவம் பறந்தோடும்.

முருக வழிபாட்டுக்கு ஏற்ற திதி சஷ்டி, நட்சத்திரம் கார்த்திகை, கிழமை செவ்வாய்.