காபி மாதவிடாய் வலியை அதிகரிக்குமா? ஏன்?
வளர் இளம் பருவத்தில் உள்ள, 90 சதவீத பெண்களுக்கு, மாதவிடாய் சமயத்தில் வலி ஏற்படுகிறது.
மாதவிடாய் ரத்தப் போக்கின் போது, 'புரோஸ்டாகிளான்டின்' என்ற வேதிப் பொருள், அழற்சியை ஏற்படுத்துவதால் வலி ஏற்படுகிறது.
'ஒமேகா 6' கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகள், இந்த வேதிப்பொருளை அதிகம் சுரக்கச் செய்து, வலியை மேலும் அதிகரிக்கச் செய்யும்.
இதற்கு பதிலாக, 'ஒமேகா 3' கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள உணவை சாப்பிட்டால், புரோஸ்டாகிளான்டின் வேதிப் பொருளால் ஏற்படும் அழற்சியை குறைக்க உதவும்.
காபி, இறைச்சி, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், அதிக சர்க்கரை உள்ள உணவுகள், உப்பு, எண்ணெய் போன்றவை அழற்சியை அதிகப்படுத்தும். இதனால் வலியும் அதிகமாகும்.
இஞ்சியில் சாறு பிழிந்து, கொதிக்க வைத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்து டீ தயாரித்து குடிக்கலாம். இது, கர்ப்பப்பை தசைகளில் சுரக்கும் புரோஸ்டோ ஹார்மோன் சுரப்பை குறைக்கும். வலியும் குறையும்.
பழங்கள், காய்கறிகள், மீன், நட்ஸ், விதைகள், ஆலிவ் எண்ணெய் போன்றவை அழற்சியை குறைக்கும்.
விலங்குகளின் இறைச்சி, பால் பொருட்களை தவிர்த்த, 'வீகன் டயட்' பின்பற்றினாலும் அழற்சி குறையும்.