செட்டிநாடு ஸ்பெஷல் கும்மாயம் செய்யலாமா?

தேவையானப் பொருட்கள்: முழு வெள்ளை உளுந்து - 1 கப், பாசி பருப்பு - 0.25 கப், ஏலக்காய் துாள் - 0.50 டீஸ்பூன்.

பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி - 0.25 கப், வெல்லம் அல்லது பனங்கருப்பட்டி - 1 கப், நெய் - தேவையானளவு.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து உளுந்து, பாசி பருப்பு, அரிசி சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து, மிக்ஸியில் நைசான மாவாக அரைத்து சலிக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு, கரைந்தவுடன், துாசி நீங்குவதற்காக வடிகட்டி தனியாக வைக்கவும்.

வடிகட்டிய வெல்ல கரைசலில், அரைத்து வைத்துள்ள மாவை போட்டு, கட்டி இல்லாமல் கரைக்கவும்.

மாவு கலவையை பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தணலில் கிளறவும். சிறிதளவு நெய், ஏலக்காய் துாள் சேர்த்து, கைபடாமல் கிளறவும்.

அல்வா பதத்துக்கு வரும் போது நெய் சேர்த்து கிளறி இறக்கினால், அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் கும்மாயம் இப்போது ரெடி.