சிக்குன்னு...வெயிட் குறைக்க இருக்கு சியா சீட்ஸ்!
எடைக் குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சியா சீட்ஸ்-ல் இருக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்...
இரண்டு ஸ்பூன் சியா விதைகளை ஒரு கப் தண்ணீரில் 20-30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும்.
சியா விதைகளை தண்ணீரில் மட்டுமல்லாது, மிருதுவாக்கிகள், தயிர், ஓட்மீல் மற்றும் சாலட்களில் சேர்ப்பது போன்ற பல்வேறு வழிகளில் உட்கொள்ளலாம்.
நார்ச்சத்து அதிகம் உள்ளதால் வயிற்றை சுத்தமாக வைத்து நீண்ட நேரம் வயிற்றை நிரம்ப வைக்கும்.
இதன்மூலம் உடல் பருமனை குறைக்க மற்ற உணவுகளை காட்டிலும் சியா விதைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சியா விதைகளை 21 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பார்க்க முடியும்.
சியா விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து. காலையில் தண்ணீரை வடிகட்டி, தயிருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்.