குழந்தை வளர்ச்சி குறைபாடு... ஆய்வில் அதிர்ச்சி

குறைந்த எடை உள்ளிட்ட காரணங்களால் உலகில் 2023 கணக்கின் படி, ஐந்து வயதுக்கு முன்பே பத்து லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர் என 'தி லான்செட்' ஆய்வு தெரிவித்துள்ளது.

இதில், அதிகப்பட்சமாக ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் 1.80 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்தியா 2வது இடத்தில் (ஒரு லட்சம் குழந்தைகள்) உள்ளது.

மூன்றாவது இடத்தில் காங்கோ (50 ஆயிரம்) உள்ளது.

குழந்தை வளர்ச்சி குறைபாடுக்கு உணவு பாதுகாப்பின்மை, பருவநிலை மாற்றம், சுகாதாரமின்மை, போர் உள்ளிட்டவையும் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் முக்கியத்துவம் செலுத்த வேண்டிய சூழல் நிலவுகிறது.