பூமிக்கு அடியில் வசிக்கும் மக்கள்; 1500 வீடுகள் கொண்ட அதிசய கிராமம்..!
உலகின் ஒரே நிலத்தடி கிராமம், தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கூப்பர் பேடி.இங்கு 70% மக்கள் நிலத்தடியில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலத்தடி வீடுகள் வெளியில் இருந்து பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றினாலும் உள்ளே அனைத்து வசதிகளும் நிறைந்துள்ளன.
இங்கு வசிப்பவர்கள் இந்த நிலத்தடி கிராமத்தில் தங்கள் வீடு, அலுவலகங்களுடன் தங்கள் வணிக நிறுவனங்களையும் அமைத்துள்ளனர்.
இந்த நிலத்தடி கிராமத்தில், பூமிக்கு கீழே தேவாலயங்கள், திரையரங்குகள், அருங்காட்சியகங்கள், பார், ஹோட்டல்கள் என அனைத்தும் உள்ளன.
கூப்பர் பேடி அருங்காட்சியகம்!
கூப்பர் பேடி நிலத்தடிஹோட்டல்!
கூப்பர் பேடி நிலத்தடி பார்!
இங்கு கோடையில் ஏசியோ, குளிர்காலத்தில் ஹீட்டாரோ தேவையில்லை நிலத்தடியில் இருப்பதால் இங்கு தட்பவெப்பநிலை எப்பொழுதும் சீராக இருக்கும்.
உலகின் தனித்துவமான கிராமத்தில் சுமார் 1500 வீடுகளில் 3500 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.