தாளித்த தயிர் இட்லி... குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர் !
இட்லி - 5, தயிர் - 2 கப், குடை மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் தலா 1, நெய், நறுக்கிய பூண்டு மற்றும் காஷ்மீரி மிளகாய் பவுடர் தலா 1 டீஸ்பூன்.
வெள்ளை எள் - 0.25 டீஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - தேவையானளவு.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், துண்டுகளாக நறுக்கிய இட்லிகளை போட்டு பொரித்தெடுக்கவும்.
சிறிய பாத்திரத்தில் தயிர் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.
கடாயில் சிறிது நெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, வெங்காயம், குடை மிளகாய், வெள்ளை எள், காஷ்மீரி மிளகாய் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
அவ்வப்போது தேவையானளவு தண்ணீர் ஊற்றவும். பின், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, தயிர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
பின், தயிர் கலவையை பொரித்து வைத்துள்ள இட்லியில் சேர்த்தால் சுவையான தாளித்த தயிர் இட்லி ரெடி.
குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்ஸ் ஆக கொடுத்தால் விரும்பிச் சாப்பிடுவர்.