இன்று ஸ்ரீ அரவிந்தர் நினைவு தினம்

உன்னைப் புண்படுத்தியவர்களையும் மன்னிப்பதே பெருந்தன்மை. ஆனால், அது அவ்வளவு எளிதான விஷயமல்ல.

அஞ்சாமையில் சிங்கத்தைப் போல இரு. சகிப்புத்தன்மையில் பசுவைப் போல இரு.

உன்னை நீயே இரக்கமின்றி ஆராய்ந்து பார். அப்போது நீ பிறரிடம் கருணையுடன் நடந்து கொள்வாய்.

நல்லவன் வருந்துவதும், தீயவன் வாழ்வதும் உலகில் நடக்கத் தான் செய்கிறது. அதற்காக கடவுளைத் தீயவன் என்று எண்ணுவது கூடாது.

உத்தமமான நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் இன்றே இப்போதே தொடங்குங்கள்.

உண்மையில் சிக்கல் என்பது நமக்குள் உள்ளது. ஆனால், சுற்றுப்புறத்தில் இருப்பதாக நாம் எண்ணுகிறோம்.

நம்முடைய குறைகளையும், தவறான செயல்களையும் ஒப்புக்கொண்டு அவற்றில் இருந்து விலக முயல்வது நன்மைக்கான வழி.

எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் உண்மையும், செயலில் நேர்மையும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை.