நீரிழிவு நோயும் கண் பாதிப்பும்!
கட்டுப்பாடற்ற, நீண்ட நாட்களாக இருக்கும் சர்க்கரை நோயால், உடலில் உள்ள பல உறுப்புகள் பாதிக்கப்படும்.
அதில் ஒன்று, கண்ணின் உட்புறத்தில் இருக்கும், 'ரெடினா' எனப்படும் விழித்திரை திசுக்களில் ஏற்படும் பாதிப்பான டயாபடிக் ரெடினோபதி.
நீரிழிவு நோய் இருப்பவர்கள், ஆண்டிற்கு ஒரு முறை கண்களை பரிசோதிப்பது கட்டாயம்.
மிக மெதுவாகவே கண் நரம்புகளை பாதிக்கும். இன்னும் சிலருக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாது.
கண்களை பரிசோதிக்க செல்லும் போது, ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதற்கான அறகுறிகள கண்களில் தெரியும்.
இதுவே, 'டைப் - 1' கோளாறாக இருந்தால், கண்களில் தீவிர பாதிப்பு ஏற்பட்டு உடனடியாக தெரியலாம்.