பெண்கள் பூப்பெய்தும் போது ஹீமோகுளோபின் அளவும் குறையுமா?
10 வயது முதல் 16 வயதிற்குள் பூப்பெய்வது இயற்கையான விஷயம்.
வாழ்க்கை முறை மாற்றங்கள், மாறும் உணவுப்பழக்கம், ரசாயனங்களால் ஏற்படும் ஹார்மோன் வேறுபாடுகளால் முன்பை விட தற்போது பெண்கள் பூப்பெய்தும் வயது குறைந்து வருகிறது.
பூப்பெய்திய இரண்டாண்டுகள் வரை மாதவிடாய் ஒழுங்கற்று வரும். அதன்பின் மாதந்தோறும் மாதவிடாய் வரும்.
சாதாரணமாக 12 வயதில் ஹீமோகுளோபின் அளவு 12 கிராம் இருக்க வேண்டும். மாதவிடாய் ரத்தப்போக்கினால் ஹீமோகுளோபின் குறையும்.
இது குறைவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் உணவில் இரும்புச்சத்து குறைபாடு தான் முக்கிய காரணம்.
தவிர கொக்கிப்புழு தாக்கம், மலேரியா, மாதவிடாய் அதிகம் போவது போன்றவையும் காரணமாக சொல்லலாம்.
எனவே இரும்புச்சத்துள்ள உணவு வகைகளுடன் பால், முட்டை, புரத உணவுகளும் கொடுப்பது நல்லது. பச்சை காய்கறிகள், கீரைகள், பேரீச்சம்பழம், அத்திப்பழம், ஈரல், சுவரொட்டி உண்ணலாம்.
தேவைப்பட்டால் டாக்டர் பரிந்துரையுடன் பூச்சி மாத்திரை (டீ வார்ம்), இரும்புச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.