காதில் இருந்து திரவம் வந்தால் மூளைக்கு ஆபத்து வருமா?

காதில் இருந்து திரவம் அதிகரித்து உள்காது சவ்வு பாதிக்கப்பட்டால், மூளையில் தொற்று ஏற்படலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

காதை முன், நடு, உள் பகுதி என மூன்றாக பிரிக்கலாம். முன்பகுதி பாதிக்கப்பட்டாலும் சீழ் வெளியேறலாம். ஆரம்ப நிலையிலே சிகிச்சை அளித்தால் குணமாகும்.

நடுக்காது பகுதி 0.6 மி.மீ., அளவே. இப்பகுதி பாதித்தால், உள்காது வழியாக எளிதில் மூளையில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தொடர் காய்ச்சல், தலைசுற்றல், காதில் சீழ் வடிதல் இதன் அறிகுறி. உடனே மருத்துவரை பார்க்க வேண்டும். எண்டோஸ்கோப்பி மூலம் சிறிய கேமரா பொருத்தி பாதிப்பு அறியப்படும்.

கேட்கும் திறன் பரிசோதனை, சி.டி., ஸ்கேன் மூலம் காது எலும்புகள் பாதிப்பு, மூளையில் தொற்று இருக்கிறதா என உறுதி செய்யப்படும்.

அறுவை சிகிச்சை மூலம் மூளையின் தொற்று கிருமிகள் அகற்றப்பட்டு, காது சவ்வு சரி செய்யப்படும்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு, காது ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இழந்த கேட்கும் திறனை மீட்டெடுக்க முடியாது.

தலை குளிக்கும் போது காதில் பஞ்சு வைத்துக் கொள்வது, குழந்தைகள் காதில் ஏதேனும் பொருட்களை விட்டால் உடனே மருத்துவரிடம் அழைத்து செல்வது அவசியம்.

மேலும், பட்ஸ், ஊக்கு, குச்சி போன்றவற்றை காதுக்குள் விடாமல் இருப்பது நல்லது.