புகைப்பிடிப்பதால் தான் இருமல் என அலட்சியம் கூடாது

அதிகளவில் அல்லது நீண்ட நாட்களாக புகைப்பிடிப்பவர்களுக்கு அவ்வப்போது இருமல் பாதிப்பு இருக்கக்கூடும்.

ஆனால், புகைப்பதால் தான் இருமல் வருகிறது என புகைப்பிடிப்பவர்கள் இருமலை அலட்சியப்படுத்துகின்றனர்.

காசநோய் அல்லது நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் கூட இருமலுக்கு காரணமாக இருக்கலாம்.

ஒரு சில நேரங்களில் காற்றுப்பை வீங்கிக் கொண்டே வரும்.

ஒரு கட்டத்தில் காற்றுப்பை வெடித்து, நுரையீரலுக்கு வெளியே காற்று தேங்கும்.

எனவே இருமல், மூச்சுதிணறல் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.