காதுகளின் மேல் நடத்தப்படும் தாக்குதல்! தீர்வு என்ன? 
        
மொபைல் போனை 'ஹெட் செட், இயர் போன்' மூலம், ஒரு மணி நேரத்திற்கு மேல் இடைவிடாமல் கேட்பதால், எந்த வயதினராக இருந்தாலும் காது கேட்கும் திறனை பாதிக்கும் என கூறப்படுகிறது.  
        
நகர்ப்புறத்தில் 10ல் மூன்று பேருக்கு இப்பிரச்னை உள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர். இவர்கள் என்ன செய்யலாம் என பார்ப்போம்.   
        
மொபைல் போனில் சத்தத்தை காட்டும் குறியீட்டில் பாதிக்கும் குறைவாக வைத்தே கேட்க வேண்டும். 
        
ஒரு மணி நேரத்திற்கு மேல் தாண்டினால், 5 - 10 நிமிடங்கள் காதுகளுக்கு ஓய்வு தர வேண்டும். அப்படி தராவிட்டால், கேட்கும் திறனை இழப்பதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் உள்ளது.  
        
அதேபோல் தொழிற்சாலைகளில் 80 டெசிபலுக்கு மேல் சத்தத்தில் நாள் முழுதும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் இருந்தால், வெகு விரைவிலேயே கேட்கும் திறன் பாதிக்கப்படும்.  
        
அதிக சத்தம் என்பது காதுகளின் மேல் நடத்தப்படும் தாக்குதல். நரம்புகள் மீது தொடர்ச்சியாக செய்யப்படும் தாக்குதல், ஆரம்பத்தில் சரி செய்யக் கூடியதாக இருக்கும். 
        
 அதன் பின், சரி செய்யவே முடியாத நிலைக்கு செல்லும். 'ஹியரிங் எய்டு' தான் பொருத்த வேண்டும் என்ற நிலை வரலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.   
        
 முடிந்தவரை இயர் போனில் கேட்பதை தவிர்க்கலாம். போனில் பேசும் போது, அமைதியான இடத்திற்கு சென்று விட்டால், சத்தத்தை அதிகரிக்க மாட்டோம்.