கல்வி கடன் பெறுவது குறித்த சில புரிதல்கள்...
மாணவர்கள் பணம் இல்லை என்ற காரணத்திற்காக படிப்பினை நிறுத்திவிட்டு வேறுவேலைக்கு போக கூடாது என்பதற்கான கல்வி கடன் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ரிசர்வ் வங்கியுடன் இணைந்து இதனை கொண்டு வந்துள்ளது.
எந்த படிப்பிற்கும் அந்த படிப்பிற்கான சேர்க்கை கடிதத்துடன் வங்கியை அணுகி கல்வி கடன் பெறலாம்.
ஆனால் அங்கீகாரம் இல்லாத படிப்பினை தேர்வு செய்தால் கல்வி கடன் கிடைக்காது.
அட்மிஷன் கட்டணம், டியூன் கட்டணம், ஸ்பெஷல் கட்டணம், தேர்வு கட்டணம் என எந்த கல்வி செலவிற்கும் வரையறைக்குட்பட்டு கல்வி கடன் கேட்க முடியும்.
தற்போது கல்வி கடனுக்கான உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளது. படிப்பிற்கு 50 லட்சம் ரூபாய் செலவு என்றாலும், அதற்கும் கல்வி கடன் வாங்க முடியும்.
4 லட்சம் வரை கல்வி கடன் வாங்கினால் எந்த பினைய பங்களிப்பு செலுத்த தேவையில்லை. முழு தொகையும் வாங்கி கொள்ளலாம்.
ஒருவேளை 6 லட்சம் ரூபாய் கல்வி கடன் என்றால் 5 சதவீதமாக 30 ஆயிரம் ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டி இருக்கும். மீதமுள்ள 5.50 லட்சம் வங்கி கடன் பெறலாம்.
கல்வி கடன் பெறுவதாக இருந்தால் மாணவர்களுக்கு பான் கார்டு எடுக்க வேண்டியது அவசியம்.
கல்வி கடன் மாணவர்களுக்கு கையில் கொடுக்கப்படாது. நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு தான் வங்கி செலுத்தும்.
படிப்பு முடித்த பிறகு ஓராண்டிற்கு கால அவகாசம் உண்டு. அதன் பிறகு கல்வி கடனை செலுத்த ஆரம்பிக்கலாம். 15 ஆண்டும் வரை கல்வி கடனை திருப்பி செலுத்த வேண்டும்.