முட்டையில்லா சாக்லேட் பனானா கேக்
தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒன்றே கால் கப், துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன், சமையல் சோடா, பேக்கிங் பவுடர், காபி தூள், வெண்ணிலா எசன்ஸ் - தலா 1 டீஸ்பூன்.
உப்பு - கால் டீஸ்பூன், பால் - முக்கால் கப், கோகோ பவுடர், நாட்டு சர்க்கரை - தலா அரை கப், எண்ணெய் - கால் கப், வாழைப்பழம் - 2, சாக்லேட் சிப் (அ) கோகோ நிப்ஸ் - 3 டீஸ்பூன்.
ஒரு பாத்திரத்தில் பாலை சூடாக்கி, அதில் கோகோ, காபி தூள் சேர்த்து கலக்கவும். வெண்ணிலா எசன்ஸ், சர்க்கரை, எண்ணெய்யை ஒவ்வொன்றாகச் சேர்த்து கலக்கவும்.
பின், வாழைப்பழத்தை கூழாக்கி, அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்கி, கோதுமை மாவு, சமையல் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்க்கவும்.
காகிதம் விரிக்கப்பட்ட லோப் பேனில் இந்தக் கலவையை ஊற்றவும்.
அதன் மீது சாக்லேட் சிப்ஸ் அல்லது கோகோ நிப்ஸ்களைத் தூவி, 180°C-க்கு முன்சூடு செய்யப்பட்ட அடுப்பில் 40 நிமிடங்கள் அல்லது அது வேகும் வரை விடவும்.
இப்போது, டேஸ்டியான முட்டையில்லாத சாக்லேட் பனானா கேக் ரெடி. அதை வெளியே எடுத்து, ஆற வைத்து, துண்டுகளாக வெட்டி பரிமாறலாம்.