உணவை ருசிக்க செய்யும் எளிய சமையல் டிப்ஸ்!
இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிது புதினா இலைகளை சேர்த்து அரைக்கவும். நல்ல சுவையாகவும்; மணமாகவும் இருக்கும்
வாழைப்பூ கூட்டு செய்யும் போது, ஆய்ந்ததும் முழுதாய் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றினால் பொடி பொடியாக கிடைக்கும்
இஞ்சியுடன் சிறிதளவு சீரகம், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து அரைத்து வடிகட்டி பருகினால், தொண்டைக்கட்டு, இருமல் நீங்கும்
குளிக்கும் வெதுவெதுப்பான நீரில் வேப்பிலை, புதினா மற்றும் துளசி இலைகளை போட்டு சிறிதளவு கஸ்துாரி மஞ்சள் கலந்து குளித்தால், உடனடி புத்துணர்ச்சி தரும்
பூண்டை தோலுரித்து, பசும்பாலில் சேர்த்து, கொதிக்க வைத்து, அந்த பாலை அருந்தி வந்தால், தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
பிரியாணி தயார் செய்யும் போது, எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டால், பிரியாணி அரிசி தனித்தனியாக பிரிந்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
ஆம்லெட் செய்யும் போது, சீஸ் உதிர்த்து சேர்த்து கொண்டால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
தக்காளி தொக்கு செய்யும் போது சிறிதளவு சிக்கன், 65 மசாலா சேர்த்தால் சுவை துாக்கலாக இருக்கும்.
கொத்தமல்லி துவையல் அரைக்கும் போது, தயிர் சேர்த்து அரைத்தால் சுவை அதிகரிக்கும்.