சுவையான வாழைக்காய் சீஸ் நக்கெட்ஸ்!
தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 2, துருவிய சீஸ் - அரை கப், இஞ்சி, பூண்டு விழுது - அரை ஸ்பூன், மிளகாய் துாள் - அரை ஸ்பூன், சோளமாவு - 2 டேபில் ஸ்பூன்
பிரட் துாள் - அரை கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு
செய்முறை: முதலில் வாழைக்காயை வேக வைத்து, மசித்து கொள்ளவும். இதில் துருவிய சீஸ், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் துாள், சோளமாவு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
இந்த கலவையை சிறு, சிறு உருண்டைகளாகவோ அல்லது கட்லெட் வடிவிலோ தட்டி கொள்ளவும்.
உருண்டைகளை பிரட் துாளில் பிரட்டி எடுக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும்.
காய்ந்ததும் உருண்டைகளை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைக்காய் சீஸ் நக்கெட்ஸ் தயார்.
எண்ணெய் அதிகம் இருக்க கூடாது என, விரும்புவோர் கலவையை கட்லெட் போல தட்டி, தோசைக்கல்லில் போடலாம். இரண்டு பக்கமும் திருப்பி போட்டால், வாழைக்காய் சீஸ் நக்கெட்ஸ் தயாராகும்