மழைக்கால சீசன் காரணமாக தற்போது பலருக்கும் சளி, இருமல் பிரச்னை வாடிக்கையாக உள்ளது.
தினமும் சாப்பிடக்கூடிய உணவிலேயே நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம்.
இதற்கு சளி, இருமலை போக்கும் வெற்றிலை ரசம் தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.
தேவையானவை: வெற்றிலை- 4, பூண்டு- 10 பல், புளி- எலுமிச்சை அளவு, தக்காளி-2, பெருங்காயம்- 1/2 சிட்டிகை, மஞ்சள்தூள்- 1 டீஸ்பூன், சீரகம், மிளகு- 1 1/2 டீஸ்பூன், சிவப்பு மிளகாய்- 5, இஞ்சி- 1 துண்டு, கடுகு-1 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு, உப்பு, எண்ணெய்- தேவைக்கேற்ப.
ஒரு பாத்திரத்தில் ரசம் வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் புளியை கரைத்து விட்டு, தக்காளியை பிசைந்துக் கொள்ளவும். அதில், இஞ்சி, சீரகம், பூண்டு, மிளகு ஆகியவற்றை இடித்துச் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொதிக்க விடவும்.
இதில், கொத்தமல்லி, வெற்றிலையை சிறு துண்டுகளாக சேர்த்து கொதிக்க விடவும். ரசம் நுரை கட்டி கொதிக்கத் துவங்கியதும் இறக்கிவிடவும். மிகவும் கொதித்தால் ரசத்தின் சுவை குறைந்துவிடும். இப்போது சளி, இருமலுக்கு இதமான வெற்றிலை ரசம் ரெடி.