இன்று தேசிய பெண்கள் தினம்
இந்தியாவில் தேசிய பெண்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப், 13ல் சரோஜினி நாயுடு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் 'கவிக்குயில்” என்று அழைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு 1879 பிப்., 13ல் ஹைதராபாத்தில் பிறந்தார்.
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, உத்தரப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையையும் பெற்றார். அவரின் பொன்மொழிகள் சில...
அன்பும், சத்தியமும் கொண்ட மனிதர்களால்தான் ஒரு தேசம் உண்மையான பெருமையடையும்
பேச்சில் அதிக தைரியம், செயலில் ஆர்வம், உள்நோக்கத்தில் ஆழமான நேர்மை ஆகியவை நமக்குத் தேவை.
வாய்ப்புகள் நமக்குத் தேடி வருவதில்லை; நாம்தான் அவற்றை உருவாக்க வேண்டும்.
ஒரு நாட்டின் மகத்துவம், அந்த இனத்தின் தாய்மார்களை ஊக்குவிக்கும் அன்பு மற்றும் தியாகத்தின் அழியாத கொள்கைகளில் உள்ளது.
விடியல் இன்னும் இருட்டாக இருந்தாலும், ஒளியை உணரும் பறவைதான் நம்பிக்கை